Mdmk Essay

328 Words2 Pages
மறுமலர்ச்சித்தோழர்களுக்கு வணக்கம். நான், தலைவர் திமுகவை விட்டு வெளியேற்றப்பட்ட காலத்திலிருந்து அவருடன் இருப்பவன். திமுகவில் இருக்கும்போது ஈடுபட்டதை விட போட்டி திமுக என பெயர் கொண்ட பிறகும் அதுவே மதிமுக ஆன பிறகும் அதிகமாக களத்தில் நின்றவன். 1996 உள்ளாட்சித்தேர்தலில் எங்கள் ஊராட்சியில் 73% வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றேன். 1994 சென்னை எழுச்சி மாநாட்டிற்குச்செல்லும் போது ஏற்பட்ட வாகன விபத்தில் எங்கள் திருவட்டார் ஒன்றியத்தைச்சேர்ந்த மூவர் பலியானார்கள். நாங்கள் சென்ற வாகனத்திற்கு முன்பு சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. அந்த தோழர்களின் மரணத்தை அருகிருந்து பார்த்தவன். 1996 தேர்தல் சிறப்பு மாநாடு - மதுரை, 1998 சென்னை கடற்கரையில் வாஜ்பாய் உட்பட தேசியத்தலைவர்கள் கலந்துகொண்ட மாநாடு வரையிலும் கட்சிப்பணியிலும் களத்திலும் நின்றவன். ஆனாலும் கட்சியில் ஒரு கிளைச்செயலாளர் பொறுப்பு கூட நான் வகித்ததில்லை. சில கட்சித்தேர்தல்களில் முழுமூச்சாக நின்று நாங்கள் ஆதரித்த தோழர்களுக்கு வாக்கு கேட்டபோதும் கூட எனக்கென பதவி கேட்டதில்லை. இடையில் சிறிது காலம் வெளிநாட்டில் இருந்துவிட்டு இனிமேல் தாய்நாட்டில் தங்கிவிடலாம் என தீர்மானித்த பிறகு கட்சியில் பொறுப்பு வாங்கி செயல்படலாம் என நினைத்தேன். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இடம் காலியாக இருப்பதாக தெரிந்துகொண்டு ஒன்றியச்செயலாளரிடம் கேட்டேன். அவர் சற்று கால அவகாசம் வேண்டுமென்றார். எனக்கு கோபம் ஏற்பட்டது. கட்சிக்காக உழைத்த எனக்கு பொறுப்பு கேட்டால் பொறுக்கச்சொல்வதா என்று? முன்னாள் மாவட்டச்செயலாளர், முன்னாள் ஒன்றியச்செயலாளர்,இந்நாள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கழகத்தின் முன்னோடிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நியாயம் கேட்டேன். அனைவரும் எனக்கு ஆதரவாகவே பேசினார்கள். பொறுப்பு தந்த போதெல்லாம் வேண்டாமென்றவன், தற்போது பொறுப்பு கேட்கும் போது தட்டிக்கழிப்பது சரியா? என ஆத்திரப்பட்டார்கள். நானும் அடுத்த கட்சித்தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என தயாரானேன். இரண்டு தினங்கள் சென்றது. ஒன்றியச்செயலாளர் என்னை சந்தித்தார். அவர் நான் கட்சிக்காக ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்தார். அன்று எங்களுடன் களமாடிய நண்பன் ஜாண் கிங்க்ஸ்லி IAS, மற்றும் நண்பர்களின்

More about Mdmk Essay

Open Document